சுற்றுலா பயணிகள் இன்றி காணப்படும் கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவியில் குறைந்த அளவு நீரில் சுற்றுலாப் பயணிகள் நான்கு நான்கு பேராக குளிக்க வேண்டிய நிலை உள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2024-03-11 01:46 GMT

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வெள்ளகெவி, வட்டக்கானல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர் வரும் நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாது போனதால் அருவிக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினமான இன்று வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குறைந்த அளவில் வரும் நீரில் நான்கு நான்கு நபர்களாக குளித்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாது போனால் அருவியில் முற்றிலும் நீர் வற்றிவிடும் நிலை ஏற்படும். கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறுச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News