சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பொள்ளாச்சி அடுத்த பழைய சர்க்கார்பதியில் குண்டத்து காளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள பழைய சர்க்கார்பதி பகுதியில் உள்ள குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. பொள்ளாச்சி..மார்ச்..04 பொள்ளாச்சி அடுத்துள்ள சேர்த்துமடை பகுதியில் பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.. இந்தகோவிலில் ஆண்டுதோறும் தை மாத இறுதியில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 25.ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து அம்மனுக்கு காலை மாலை என சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் அபிஷேகம் நடைபெற்று வந்தது.. மேலும் நேற்று முன்தினம் பொன்னாலம்மன் மலைக்கோவிலிலிருந்து தீர்த்தம் மற்றும் கங்கையிலிருந்து பூவோடு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதனை தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இன்று காலை 50.க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..