நாகர்கோவிலில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு !
நாகர்கோவிலில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 06:55 GMT

உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதன் (42) நேற்று முன்தன மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சந்தேகத்தின் பேரில் சுப்பையார் குளத்திற்கு சென்று தேடினர். அப்போது மதனின் உடமைகள் கரையில் இருந்தன. ஆனால் அவரை காணவில்லை. எனவே குளத்தில் அவர் குளிக்க இறங்கி மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வீட்டில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மதன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்டு போலீசார் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.