மது போதையில் கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் பாலத்தில் கீழே நடந்து சென்ற போது மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-07 07:32 GMT

மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி

கர்நாடக மாநிலம், பெங்களூர், எண்ணூர் பன்டா வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 57. இவர்கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஆயினும், பழனிச்சாமி மது போதைக்கு அண்மை காலமாக அடிமையாக இருந்தார். இந்த நிலையில், ஜனவரி 4ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில், புன்னம் சத்திரம் டாஸ்மார்க் கடை எதிரில் உள்ள பாலத்தின் அடியில் மது போதையில் நடந்து சென்றவர், நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள், காவல்துறைக்கும், பழனிச்சாமி மனைவி ராணி வயது 52 என்பவருக்கும் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ராணி இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News