தடுமாறி கிழே விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு
Update: 2023-12-20 07:00 GMT
காவல் நிலையம்
கடலூர் மாவட்டம் செல்லங்குப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கலைவாணன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் வந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.