அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த தொழிலாளி

பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் கீழே தவறி விழுந்து உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார்.

Update: 2024-06-21 05:17 GMT
பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த பள்ளியில் புதிய வகுப்பறை ஆய்வகம் போன்றவை கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அங்கேயே தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி, தவசிநகரை சேர்ந்த செல்வராஜ் (55) என்பவரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் கீழே தவறி விழுந்து உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார். நேற்று அதிகாலையில் இதை பார்த்த சக ஊழியர்கள் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News