இருசக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு !
கடத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.;
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அருகே உள்ள ரேகட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கார்த்திக் இவருக்கு திருமணம் ஆகி கயல்விழி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கார்த்திக், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் கிரஷர் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார்.
வேலை முடித்துவிட்டு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் மத்தூரில் இருந்து ரேகடஅள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார். சில்லார அள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது தனக்கு பின்னால் வந்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கார்த்திக் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திக்கின் தலை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கடத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கால் பண்ணு மேற்கொண்டு வருகின்றனர்