8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சேலம் மாவட்டம், முட்டைக்கடை காலணியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்து.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள முட்டைக்கடை காலனியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 51), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி வீட்டில் இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரான்சிஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக பிரான்சிஸ்சுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.