ஷட்டர் ஓட்டை வழியாக வீணாகும் ஏரி தண்ணீர்
பொதுப்பணித்துறையினர் ஷட்டரை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
Update: 2023-12-27 02:17 GMT
ஷட்டர் ஓட்டை வழியாக வீணாகும் ஏரி தண்ணீர்
காஞ்சிபுரம் அடுத்த வேளியூர் கிராமத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, 750 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள்நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர். இந்த ஏரி கலங்கல் அருகே, உபரி நீர் வெளியேறும் வகையில் இரண்டு ஷட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த ஷட்டர் சரியாக மூடாததால், ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. குறிப்பாக, ஷட்டரின் இடைவெளி ஓட்டை வழியாக, ஏரியில் தேங்கி இருக்கும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதேநிலை நீடித்தால், நவரை பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறையினர் ஆய்வு செய்து, வேளியூர்ஏரி மதகு ஷட்டர்ஓட்டையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.