லால்பாக் எக்ஸ்பிரஸ் வரும் 24-ந்தேதி காட்பாடி வரை மட்டும் இயக்கம்

லால்பாக் எக்ஸ்பிரஸ் வருகின்ற 24ஆம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-04-18 09:36 GMT

கோப்பு படம் 

சென்னை கோட்டத்தில் பாதுகாப்பு பணிகள் காரணமாக பின்வரும் ரயில்களின் பகுதி ரத்து மறு அட்டவணையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வரை செல்லும் லால் பாக் எக்ஸ்பிரஸ் வருகிற 24-ந் தேதி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி வரை மட்டும் செல்லும்.

அதன் பிறகு காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அதே நாளில் சென்னையில் இருந்து மைசூரு செல்லும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டு,

லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலை மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றி காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக மைசூருக்கு செல்லும். மற்ற நாட்களில் பழைய அட்டவணை படி ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

மேலும் சில குறிப்பிட்ட ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரயில் பயணிகள் முன் கூட்டியே தங்களது பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News