பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி: 2 மாதத்தில் தொடக்கம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 மாதத்தில் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-22 11:08 GMT
கோப்பு படம் 

"சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 746.18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதில் 1917.17 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுடையது. மற்றவை அனைத்தும் விவசாய மற்றும் பட்டா நிலங்கள் ஆகும்.

இவை அனைத்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள்முதலே பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த மாதம் விமான நிலைய பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்தநிலையில் நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிப்பது, கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை, இழப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

விமான பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிவடைய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்."

Tags:    

Similar News