சாத்தூரில் மண் சரிவு: முதியவர் காயம்

சாத்தூரில் வாறுகால் அமைக்கும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு முதியவர் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

Update: 2024-03-15 15:28 GMT

காயமடைந்த முதியவர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பஜார் பகுதிகளில் சுமார் 35 கோடி மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே இன்று வாறுகால் அமைக்கும் பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மீன்துள்ளி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (65) என்பவர் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட குழிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த மண் சரிவில் லட்சுமணன் சிக்கி கொண்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்புத்துறைக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் மண் சரிவில் சிக்கியிருந்த லட்சுமணனை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும் சாத்தூரில் வாறுகால் அமைக்கும் பணியின் போது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எந்தவித முன் எச்சரிக்கை பதாகைகள் வைக்காமல் ஒப்பந்தக்காரர்கள் ஆஜாக்கிரதை யுடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News