போடி மெட்டு மலைச்சாலையில் மண்சரிவு

Update: 2023-12-17 01:31 GMT

மண் சரிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் கேரளா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு மலைச்சாலையில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டது. கேரளா செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

சிறு சிறு மண் சரிவுகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போடி மெட்டு சாலையில் உள்ள எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ராட்சச பாறைகள் சாலையில் ஒரு பகுதியில் விழுந்து அப்புறப்படுத்தப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்டு உள்ள ஈரப்பதம் காரணமாக இன்று காலை சுமார் 11 மணியளவில் போடி மெட்டு மலைச்சாலையில் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பதினோராவது கொண்டை ஊசி வளைவு அருகிலேயே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மண் மரங்கள் பாறைகள் சரிந்து கொண்டே இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவினை கண்காணித்து போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் மண் சரிவுகளை அப்புறப்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News