மலைக்கிராமங்களில் மண் சரிவு

கொடைக்கானல் தாண்டிக்குடி பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது.

Update: 2024-05-11 01:37 GMT

கொடைக்கானல் தாண்டிக்குடி பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் வேளை முதல் நள்ளிரவு வரை மழையானது இடைவெளி விட்டு பெய்து வந்தது, குறிப்பாக நேற்று இரவு பண்ணைக்காடு, ஊத்து, மங்களம்கொம்பு உள்ளிட்ட கீழ்மலை கிராமங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையானது கொட்டி தீர்த்தது, இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன, இதனையடுத்து தாண்டிக்குடி பிரதான மலைச்சாலையில் பட்டலங்காடு அருகே நேற்று நள்ளிரவில் மண் சரிவானது ஏற்பட்டுள்ளது, இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயம் உள்ளிட்ட அன்றாட பணிகளுக்கும், வெளியூர் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தற்போது வரை இந்த மண் சரிவினை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முன் வரவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது, இதனை துரிதமாக நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தி அகற்ற வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கையும் விடுத்துள்ளனர், மேலும் இந்த மண் சரிவு காரணமாக சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன,இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News