கொடைக்கானல் மலர் கண்காட்சியில் லேசர் ஷோ

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் லேசர் ஷோ நடத்தப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா கூறினார்.

Update: 2024-05-18 06:20 GMT

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் லேசர் ஷோ நடத்தப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா கூறினார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சியை முதன்மை செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அபூர்வா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பேட்டியளித்தார்.

இதில் இந்த வருடம் முதன் முறையாக 10 நாட்கள் மலர் கண்காட்சி,கோடை விழா நடைபெறும் என்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சுற்றுலாப்பயணிகள் வந்த செல்லவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,இயற்கை மலர்கள் அரங்கில் வைத்துள்ளதாகவும்,மலர்களால் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,இது பொதுமக்களுக்கு பொழுது போக்கிற்கும் பயன் உள்ளதாகவும் இருக்கும் என்றால்,நுழைவு கட்டணம் குறித்து கேள்விக்கு பார்க்கப்படும் என்றும், லேசர் ஷோ நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News