கடலில் திருவள்ளுவர் சிலையினை காண லேசர் தொழில்நுட்ப காட்சி
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண்பதற்கு அமைக்கப்பட்டு வரும் ஒலி மற்றும் ஒளி காட்சி கூடப்பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி நடுக்கடலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண்பதற்கு அமைக்கப்பட்டு வரும் ஒலி மற்றும் ஒளி காட்சி கூடப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்தாதவது- கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையில் தொழில்நுட்ப திட்டத்தினை செயல்படுத்த ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சென்னையின் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகத்தின் அருகில் அமைந்துள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்து திரையில் அய்யன் திருவள்ளுவர் சிலையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிக்கூடத்தில் 200 பேர் பார்வையாளர்களாக அமரும் படி செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது தள உபகரணங்களை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆகஸ்ட் 2024-க்குள் முடிவடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.நடைபெற்ற ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் ஜி.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.