மாணவர்களை வாழ்த்திய சட்டத்துறை அமைச்சர்
நாகை மாவட்டத்தில்12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் வாழ்த்து பெற்றனர்.
Update: 2024-05-12 09:12 GMT
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வாணன்மகாதேவி கிராத்தைசேர்ந்த மாணவி என்.சுபிஷா இவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 568 மதிபெண்ணும், தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதப்பதி கிராமத்தை சேர்ந்த விஷால் இவர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்றனர். இருவரும் நாகை மாவட்ட அளிவில் முதல் இடம் பிடித்தனர். இதையடுத்து நாகை மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் வாழ்த்து பெற்றனர். மாணவிகள் இருவருக்கும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் நாகை மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன் ஆகியோர் மாணவி என்.சுபிஷா, மாணவன் விஷால் ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.கோவிந்தராசன், நாகை நகரச் செயலாளர் இரா.மாரிமுத்து, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தலைஞாயிறு மகா.குமார், வேதாரண்யம் மேற்கு உதயம் வே.முருகையன், கீழ்வேளூர் தெற்கு கே.பழனியப்பன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் வி.எம்.கே.ஜி.பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வா, மாவட்ட பிரதிநிதி மச்சழகன், ஒன்றிய மாணவர் அணி மணிகண்டன், பள்ளிமேடு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தாமரைபுலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதாபாலசுந்தரம், அவரிகாடு லலிதாகலைச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.