வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
கரூரில் வழக்குகளை இடமாற்றம் செய்ததால், நான்கு நாட்களுக்கு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
Update: 2024-04-16 06:54 GMT
வழக்குகளை இடமாற்றம் செய்ததால், நான்கு நாட்களுக்கு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஏப்ரல் 12ஆம் தேதி வழக்கறிஞர் சங்க பொது உறுப்பினர் அவசர கூட்டத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் குடும்ப நல வழக்குகளை கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை கண்டித்து, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதன தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று காலை அரசு மற்றும் நீதிமன்ற நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப நல வழக்குகளில் பாதிப்புகளை தடுக்கும் விதமாகவும், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஏற்படும் அசவுரியங்களை தீர்க்கவும், நேற்று முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் வழக்கறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.