பூதப்பாண்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

குற்றவியல் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூதப்பாண்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-07-05 04:13 GMT
பூதப்பாண்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஆர்ப்பாட்டம் 

  • whatsapp icon
குற்றவியல் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி  வருகின்றனர். தொடர்ந்து இரண்டாம் தேதியும் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..அன்றைய தினம் ஐந்து இடங்களில் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.       இந்த நிலையில் நேற்று மீண்டும்  நாகர்கோவில், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, குழித்துறை, இரணியல் ஆகிய நீதிமன்றங்களை  வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு செய்தனர்.      பூதப்பாண்டியில் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெரோம் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணிய ராஜன், பொருளாளர் அய்யப்பன், இணை செயலாளர் சாம்ராஜ் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News