புதிய சட்ட திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று முதல் ஒருவாரத்துக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Update: 2024-07-01 05:56 GMT

நீதிமன்றம் (பைல் படம்)

. மத்திய அரசு குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மாற்றுவதுடன் அதில் உள்ள சட்டப்பிரிவுகளையும் மாற்றுவதைக் கண்டித்தும், அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் அவற்றை திரும்பப் பெறக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று  முதல் ஒருவாரம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) அழைப்பு விடுத்துள்ளது.

இதனை ஏற்று. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை சீர்காழி தரங்கம்பாடி ஆகிய நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக தெரவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, இன்று கருப்பு நாளாக அனுஷ்டித்தும், 2-ஆம் தேதி நீதிமன்றங்களின் முன்பு ஆர்ப்பாட்டம், 3-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

Tags:    

Similar News