தர்மபுரியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.;

Update: 2024-07-02 06:58 GMT

மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது அந்த மூன்று சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பிலும் புதிய சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

அதனடிப்படையில் தருமபுரி உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்கள் தேவையற்றது இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட தலைவர் சிவம் தலைமையில் நீதிமன்ற அலுவல் பணிகளில் கலந்து கொள்ளாமல் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News