பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2024-07-02 03:31 GMT

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் முப்பெரும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இந்திய அரசு முப்பெரும் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ச்சியாக நீதிமன்ற பணி புறக்கணிப்பிலும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் சார்பில் அதன் மாவட்ட தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள வழக்கறிஞர்கள் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News