3 சட்டங்களின் பெயர்களை மாற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்!

மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை வடமொழியில் மாற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-03 08:56 GMT

ஆர்ப்பாட்டம் 

கோவை:இந்திய நீதிமன்ற சட்டங்களான IPC, Cr PC, IEA ஆகிய மூன்று சட்டங்களை புதிதாக வடமொழியில் BNS- பாரதிய நியாய ஷன்ஹிதா, BNSS- பாரதிய நஹ்ரிக் சுரஷா, BS- பாரதிய சஷய அதினயம் என மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரியில் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் உண்ணாவிரதப் போராட்டம்,ஆர்ப்பாட்டம் ஆகியவை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று  நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி வழக்கங்களை எழுப்பினர்.தொடர்ந்து இன்று  அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 8ம் தேதி திருச்சியில் கண்டன பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News