புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை கண்டித்து விருதுநகர் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-07-03 07:25 GMT
  • whatsapp icon
மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என்ற பெயரில் புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகரில் நேற்று  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் அட்வகேட் அசோசியேசன் செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News