சங்ககிரியில் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சங்ககிரியில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-05 08:56 GMT

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்ட திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் மூன்று சட்ட திருத்தங்களை திருத்தம் செய்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மூன்று சட்ட திருத்தங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது . இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற திமுக வழக்கறிஞர்கள் சார்பாக சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்லப்பன் மற்றும் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில்,

50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்ட திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகம் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News