கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டதிருத்தத்தை கண்டித்து கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-06-26 01:28 GMT
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சா. விவேகானந்தன் தலைமை வகித்தார் , செயலர் செந்தில் ராஜன் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் புதிய சட்டதிருத்தத்தை கண்டித்தும், அவற்றை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டத்தை மூத்த வழக்கறிஞர் துணைத் தலைவர் இளங்கோவன் பொருளாளர் ராஜா சீனுவாசன் துணைச் செயலாளர் பாலாஜி நூலகப் பொறுப்பாளர் லஷ்மி மூத்த வழக்கறிஞர்கள் வி கலியபெருமாள் எஸ் ஜெயராமன் என் நடராஜன் ராஜசேகர் சங்கர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்