சிவகங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களை கண்டித்து சிவகங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
Update: 2024-07-05 06:20 GMT
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் மூன்று சட்டங்களை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து மூத்த வழக்கறிஞர் பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் மருது, தீபன் சக்கரவர்த்தி, விஜய ஜோதி, மகேந்திரன், சேதுராமச்சந்திரன், சக்கந்தி முருகன், செந்தில்குமார் மற்றும் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்