வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு இயற்றியுள்ள முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2024-07-04 03:59 GMT
வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு இயற்றியுள்ள முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

  • whatsapp icon
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக, மத்திய அரசு இயற்றியுள்ள முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கச்செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில், வழக்கறிஞர்கள் சுரேஷ், கணேசன், பூர்விஷா, மகாராஜன்  உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசே, மத்திய அரசே புதிய சட்டத்தை ரத்துசெய். வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு புதிய சட்டத்தை வாபஸ் வாங்கு என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Tags:    

Similar News