சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!!

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-07-09 04:44 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!!

Lawyer

  • whatsapp icon

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அப்போது இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News