நாகையில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் .க.அன்பழகன் தலைமையில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.சந்திரன் , மயிலம் சட்டமன்ற உறுப்பினர் .ச.சிவக்குமார் , ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தி சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் .வி.பி. நாகை மாலி அவர்கள், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் .ஓ.எஸ்.மணியன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர். ஜெ.முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுதிறனாளி நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.24,00,275/- மதிப்பீட்டில் இருகால் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் எஸ்கூட்டர்களையும், மாவட்டம் தொழில் மையம் சார்பில் 1 பயனாளிக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.1,17,000/- மானியத்தில் ஆட்டோவினையும், 1 பயனாளிக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.3,85,000/- மானியத்தில் டிராக்டரையும், தாட்கோ துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ. 3,50,000/- மானியத்தில் மளிகைக்கடை வைப்பதற்க்கும். 1 பயனாளிக்கு ரூ. 3,35,000/- மானியத்தில் பயணியர் ஆட்டோவினையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு 5.6,00,000/- மானியத்தில் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.65,000/- மதிப்பீட்டில் படகு மூழ்கியதில் நிவாரணத்தொகையினையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் வழங்கினார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செட்டிதெருவில் வசித்து வரும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, உடனடித்தீர்வாக வருவாய்த்துறையின் சார்பில் 4 நாடோடி பழங்குடியினருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் வழங்கினார்கள். இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சபேபீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் .ரஞ்ஜீத்சிங், , மாவட்ட வன அலுவலர் திரு.அபிஷேக் தோமா,மாவட்ட காவல்காணிப்பாளர் .ஹாஷ் சிங் மாவட்ட ஊராட்சி தலைவர் .ச.உமா மகேஸ்வரி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நாகையில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு