திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை புலி நடமாட்டம் !
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-25 11:34 GMT
சிறுத்தை புலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த 27 கொண்டை ஊசிகளை கொண்ட திம்பம் மலைப்பகுதி உள்ளது இந்த நிலையில் நேற்று மாலை 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் சிறுத்தை படுத்து கிடந்தது அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை புலி கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர் உடனே அவர்கள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர் சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை புலி அங்கிருந்து திம்பம் மலை பாதையை கடந்து வனப் பகுதியில் சென்று மறைந்தது திம்பம் மலைப்பாதை வழியாக வரும் வாகன ஓட்டிகள் எங்கு வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்