மீண்டும் சிறுத்தை நடமாட்டம்- வனத்துறை தீவிர கண்காணிப்பு

பந்தலூர் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2024-01-09 12:22 GMT

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமண்ணா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. மூன்று பழங்குடியின பெண்களை தாக்கி அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரு தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் வடமாநில தொழிலாளியின் 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன பின்பு நேற்று முன்தினம் மனிதர்களை தாக்கிக் கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் பந்தலூர் அருகே பேரி அக்ரோ பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்த பின்பு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்ட பகுதிகளை கேட்டுடறிந்து குடியிருப்பின் அருகே உள்ள மரங்களில் கண்கணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் .

Tags:    

Similar News