தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 11:53 GMT
தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு விளம்பர பிரசுரங்கள் வழங்கி, டாக்டர் காந்திமதி, உடலில் வெளிர்ந்த, சிவந்த உணர்ச்சியற்ற தேமல், நரம்புகள் தடித்திருத்தல், கை மற்றும் கால்களில் உணர்ச்சியின்மை மற்றும் காதுமடல் தடித்திருத்தல் ஆகியவை தொழுநோயின் அறிகுறிகள் என விளக்கினார்.மேலும் தொழுநோயை எந்த நிலையிலும் குணப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன் தொழுநோயின் சிகிச்சைகள் குறித்து எடுத்துரைத்தார். சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், பாலா உட்பட பலர் பங்கேற்றனர்.