சேலத்தில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி
சேலத்தில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 04:07 GMT
நடைபயிற்சியில் ஈடுபட்ட மக்கள்
தமிழகம் முழுவதும் 8 கிலோமீட்டர் அளவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் நடைபயிற்சி திட்டத்தை சென்னையில் இருந்து காணொளி மூலம் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து துவங்கிய நடைபயிற்சி கோரிமேடு வழியாக மாடர்ன் தியேட்டர்ஸ் வரை சென்று மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் நிறைவு பெற்றது. இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.