நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்கம்
நடைபயிற்சி திட்டம் தொடக்கம்
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ”நடப்போம் நலம் பெறுவோம்” எனும் சுகாதார நடைபயிற்சி (Health Walk) தளத்தினை இன்று தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் ”நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் அதியமான்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதி, தருமபுரி சிப்காட் அமையவுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 8 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சியில் (Health Walk) மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி கலந்துகொண்டு, சுகாதார நடைபயிற்சி மேற்கொண்டார்கள்.
உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ.தடங்கம் சுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன்,துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெயந்தி,நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மகேஸ்வரி பெரியசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்