கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் அரசு விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-12-01 08:55 GMT

வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையுடன் இணைந்து அரசு விடுதியில் தங்கி கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விடுதியில் தங்கி பயிலும் அனைத்து பட்டதாரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது,  மாணவ,மாணவிகள் கல்வி பயில்வதற்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட செயல்பாடுகள் மற்றும் பணிகளை உரியவாறு மாணவ மாணவிகள் பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான அரசு பணிகளிலோ, தனியார்துறை பணிகளிலோ அல்லது தொழில்முனைவோராக தங்களை உருவாக்கி கொள்ள ஏதுவாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அரசு பணிக்கோ அல்லது தங்களுக்கு பிடித்த தனியார் பணிக்கோ செல்ல வேண்டுமேன்றால் முழு முயற்சியும், தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம். என தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். சிறப்பாக பதில் அளித்த மாணவ மாணவியர்களுக்கு போட்டித்தேர்வுகள் தொடர்பான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இராதாகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு மோசஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் தினேஷ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக கண்காணிப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News