கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
ஆம்பூரில் வடமாநில முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Update: 2024-05-02 01:27 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வடமாநில முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரபீக்அஹமதுக்கு சொந்தமான தோல் குடோன் ஆம்பூர் உமர்ரோட்டில் உள்ளது. இந்த குடோனை வடமாநிலத்தை சேர்ந்த ராம்ஜிலால் (வயது 60) மற்றும் குல்தீப் சிங் (23) ஆகிய 2 பேரும் வேலை பார்த்து வந்தனர். கடந்த 4.3.2018 ராம்ஜிலால் மற்றும் குல்தீப் சிங் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் குக்கர் மூடியை எடுத்து ராம்ஜிலாலை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே விழுந்து உயிரிழந்தார் இதுதொடர்பாக ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு குல்தீப் சிங்கை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் சிங்கிற்கு மாவட்ட நீதிபதி மீனா குமாரி ஆயுள் தண்டனை, மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து குல்தீப் சிங்கை போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.