காதல் திருமணம் செய்த மகனை கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை

காதல் திருமணம் செய்த மகனை கொலை செய்த தாயார் மற்றும் தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

Update: 2024-03-02 17:18 GMT

மகனை கொலை செய்த தாயார் மற்றும் தாய் மாமன் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு சேனியர் தெருவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஹரிஹரன் ( 23 ). தாயார் நாகேஸ்வரியுடன் ( 49 ) வசித்து வந்தார். இந்நிலையில், ஹரிஹரன் காதல் திருமணம் செய்ததால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி அதிகாலை ஏற்பட்ட தகராறில், ஹரிஹரனை அவரது தாயார், தாய்மாமன் நாகராஜ் ( 45 ) ஆகியோர் இணைந்து கம்பியால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து நாகேஸ்வரி, நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரபாகர் ஆஜராகினார். வழக்கை விசாரித்தமாவட்ட கூடுதல் நீதிபதி சத்தியதாரா குற்றம் உறுதி செய்யப்பட்ட நாகேஸ்வரி நாகராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் மற்றும் தடயங்களை மறைத்த குற்றத்துக்காக 4 ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Tags:    

Similar News