வானூர் அருகே 15 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்தல்
15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்களை கள்ளத்தனமாக சொகுசு காரில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 11:34 GMT
விழுப்புரம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயரக மதுபாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் விழுப்புரம் மண்டல நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சின்னகாமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டனூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான இரண்டு சொகுசு கார்கள் மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவற்றை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பாலமுருகன் (25) இவர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர் ரக மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்பட்ட இரண்டு சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.