மூலிமங்கலத்தில் மது விற்பனை: 15 மது பாட்டில் பறிமுதல்
மூலிமங்கலம் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை செய்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மூலிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து, புகலூர் தாலுக்கா அலுவலருக்கு கிடைத்த தகவலின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மூலிமங்கலம் டாஸ்மாக் கடை அருகே சோதனை மேற்கொண்ட போது, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் வயது 23 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 13 குவாட்டர் மது பாட்டில்களும்,
இரண்டு பீர் பாட்டில்களும், விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.