பாடாலூர் பகுதியில் மது விற்றவர் கைது
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் மதுவிற்பனையில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-06-09 04:56 GMT
மதுவிற்பனை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மதுவிற்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் டி.களத்தூரை சேர்ந்த ராபீன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட் டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ராபீனை கோர்ட் டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.