சாராயம் விற்றவர் கைது
திருத்தணி அருகே சாராயம் விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-07-01 01:54 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த நெமிலி காலனி பகுதியில் ஆந்திராவில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் நேற்று நெமிலி காலனியில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது, தட்சணாமூர்த்தி மகன் கார்த்திக் (27) என்பவர் வீட்டின் பின்புறத்தில், 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்வதற்கு ஆந்திராவில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடத்தி வரப்பட்டது என விசாரணையில் போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.