ஜூன் 26 முதல் சிறுபான்மையினருக்கான கடனுதவி முகாம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜூன் 26 முதல் சிறுபான்மையினருக்கான கடனுதவி முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

Update: 2024-06-20 05:33 GMT

ஆட்சியா் ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் சிறுபான்மையினருக்கான கடனுதவி முகாம்கள் ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடனுதவி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சிவகங்கை வட்டத்தில் வருகிற 26-ஆம் தேதி, மானாமதுரை வட்டத்தில் 27-ஆம் தேதி, இளையான்குடி வட்டத்தில் 28-ஆம் தேதி, திருப்புவனம் வட்டத்தில் ஜூலை 2-ஆம் தேதி , காளைாயா்கோவில் வட்டத்தில் 3-ஆம் தேதி, திருப்பத்தூா் வட்டத்தில் 4-ஆம் தேதி, சிங்கம்புணரி வட்டத்தில் 9-ஆம் தேதி, காரைக்குடி வட்டத்தில் 10-ஆம் தேதி, தேவகோட்டை வட்டத்தில் 11-ஆம் தேதியும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. எனவே, விருப்பமுள்ள சிறுபான்மையினத்தவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News