பண்ருட்டியில் விசிக சார்பில் பரப்புரை பேரணி
பேரணியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-22 02:40 GMT
கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
பண்ருட்டி நகரில் கடலூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ''வெல்லும் சனநாயகம் மாநாடு'' பரப்புரை பேரணி கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மாநாட்டு பரப்புரையில் ஈடுபட்டார். இதில் மண்டல செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், ஆ.வெங்கடசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.