அழகு நிலைய பூட்டை உடைத்து கொள்ளை - ஒருவர் கைது

தூத்துக்குடி மணி நகா் பகுதியில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து ரூ.22ஆயிரம் திருடியதாக ஒருவரை மத்தியபாகம் போலீஸாா் கைது செய்தனா்.;

Update: 2023-12-03 11:36 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜபிரபுவின்  மனைவி, மணிநகா் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இந்த அழகு நிலையத்தில் கடந்த நவ. 29இல் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.22ஆயிரம் திருடு போனதாம். இதுகுறித்து ராஜபிரபுவின் மனைவி தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில்  புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மேல தட்டாப்பாறையைச் சோ்ந்த மருதன் என்பவரின் மகன் சுடலைமணி (53) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Tags:    

Similar News