கட்டிட பொறியாளரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்

தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் சிவில் இன்ஜினியரிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது .;

Update: 2024-04-01 02:23 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

தாராபுரம் தேர்தல் பறக்கும் படை நிலை குழு அலுவலர் வெங்கடேசன் (மூலனூர் பிடிஓ) தலைமையில் தாராபுரம் கரூர் ரோடு கொளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்த போது அதில் ரூபாய் 10 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில் தாராபுரம் போளரையைசேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன்( 27 )கட்டுமான பணிக்காக ரூபாய் 10 லட்சம் ரொக்கம் பெற்று செல்வதாக கூறினார் .

Advertisement

ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது . தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. தாசில்தார் இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் செந்தில் அரசனுக்கு தகவல் அளித்தார் .செந்தில்அரசன் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை பார்வையிட்டு ரு 10 லட்சத்தை டிரசரியில்செலுத்துமாறு உத்தரவிட்டார். தாராபுரத்தில் பட்டப்பகலில் பறக்கும் படையினர் நடத்திய சாதனையில் ரூபாய் 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News