உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.72.5 ஆயிரம் பறிமுதல்

சாத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 72,500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-22 08:32 GMT
பணம் ஒப்படைப்பு 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள சிவகாசி சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உப்புபட்டி அருகே சாத்தூர் மண்டல துணை வட்டாடர வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ராஜபாளையம் வட்டம் ஆர் ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் சென்ற இருசக்கர வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது ஹரிதாஸ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 72,500 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை  தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனலட்சுமி சாத்தூர் தாசில்தார் லோகநாதனிடம் ஒப்படைத்தனர். மேலும் தாசில்தாரிடம் ஒப்படைக்கப் பட்ட பணம் அரசு கருவூலத்தில் உரிய பாதுகாப்புடன் செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News