நாகர்கோவிலில் லாரி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சாலை சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-05 10:11 GMT
சென்டர் மீடியனில் மோதிய டாரஸ் லாரி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நகரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சென்டர் மீடியன்கள் உள்ளன. ஆனால் சமீப காலமாக வாகனங்கள் அதிவேகமாக வந்து சென்டர் மீடியன்களில் மோதி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் மட்டும் நாகர்கோவில் பகுதியில் சுமார் ஏழு விபத்துக்கள் தொடர்ச்சியாக நடந்தன.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் வடசேரி எம்ஜிஆர் சிலை சந்திப்பில் உள்ள சென்டர் மீடியனில் டாரஸ் லாரி மோதியது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது. இதேபோல் சென்டர் மீடியன் காங்கிரீட் கட்டைகளும் தூக்கி எறியப்பட்டு நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக வேறு வாகனங்கள் வராததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. விபத்து நடந்த சிறிது நேரத்தில் மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு டாரஸ் லாரி அகற்றப்பட்டது. சென்டர் மீடியன்களும் ஒழுங்கு செய்யப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News