லாரி - பஸ் மோதல் : 20 விசிகவினர் காயம்

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்ற பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2024-05-09 05:55 GMT

விபத்துக்குள்ளான பேருந்து 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தீவட்டிப்பட்டியில் இருந்து கட்சியை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். இந்த பஸ் மாமாங்கம் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மோதி மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் பஸ்சில் இருந்த 20 பேர் காயம் அடைந்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News