லாரி செட் தொழிலாளி கொலை: உரிமையாளர் கைது
தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் லாரி செட் தொழிலாளி சுத்தியால் தாக்கி லாரி செட் உரிமையாளர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
லாரி செட் தொழிலாளி கொலை
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் வசந்த் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (49). கடந்த 20- ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து தூத்துக்குடி 3-வது மைல் மேபாலம் அருகே உள்ள தூத்துக்குடி, சண்முகபுரத்தை சேர்ந்த தில்லை சிதம்பரம் (60) என்பவருக்கு சொந்தமான லாரி செட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி இவர் குடிபோதையில் இருந்து வந்ததால் அவரை அந்த லாரி செட் உரிமையாளர் தில்லை சிதம்பரம் வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.
இதனால் நேற்று மாலை குடிபோதையில் வந்த பிரேம்குமார், தில்லை சிதம்பரத்திடம் தகராறு செய்தாராம். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தில்லை சிதம்பரம் லாரி செட்டில் கிடந்த சுத்தியலால் பிரேம்குமார் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பிரேம் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி-யில் பணியாற்றும் இடத்தில் உரிமையாளர் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.